
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அப்பகுதியில் நாள்தோறும் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் அசால்டாக சுற்றி திரிவது வழக்கம், அதேபோல காட்டு யானை வனப் பகுதியில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே வனத் துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் மீண்டும் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு செல்லக் கூடிய தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் காட்டு யானை விவசாய தோட்டத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்ட போது வனத் துறையினர் காட்டு யானையை விரட்ட இரண்டு வாகனங்களில் சென்றனர். அப்போது வனப் பகுதிக்குள் சென்ற காட்டு யானை மீண்டும் வனத் துறையினரின் வாகனத்தை பார்த்து ஆக்ரோசமாக வந்து மிரட்டி முட்டி தள்ள முயன்ற வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
