தேனி மாவட்டம் போடி அருகே தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட உலக்குருட்டி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் மேய்ச்சலுக்காக அங்குளம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில்

நேற்று இரவில் மேய்ச்சலுக்காக நுழைந்த காட்டு மாடு அதிகாலையில் வனப்பகுதியை நோக்கி செல்லும் போது முள்வேலியை கடக்க முயன்ற போது காலில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு முள்வேலியை கடக்க முடியாமல் மாந்தோப்பிலேயே காயத்துடன் பரிதவிப்புடன் இருந்த நிலையில்.
ரோந்து பணியில் இருந்த வனக்காவலர்கள் தேனி வனச்சரக அலுவலர் சிவராம் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தேனி வனச்சரக அலுவலர் சிவராம் அவர்கள் தலைமையில் வந்த மருத்துவக்குழுவினர் ஆய்வின் போது வயது முதிர்வின் காரணமாக (சுமார்18) தடுமாறி தண்ணீர் இல்லாததால் சோர்வு நிலையில் இருப்பதாகவும்,
பழங்களுக்குள் வலிநிவாரணி மாத்திரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், தானாக எழுந்து செல்லும் வரை பாதுகாப்பு பணியில் இரண்டு வனக்காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்த வனச்சரகர், தொடந்து கண்காணித்து காட்டுமாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.