• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி பகுதியில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் செம்பாலா பகுதியில் சாலையில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது…
கூடலூர் நகரப் பகுதிகளில் சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் உலா வருகின்றன இந்த நிலையில் செம்பாலாப் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் பெரிய காட்டு பன்றிகள் சாலையை கடக்க நீண்ட நேரம் முயற்சி செய்தது தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்ததால் காட்டு பன்றிகளால் சாலையை கடக்க முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து சாலையை கடந்த காட்டுப்பன்றிகள் மீண்டும் வந்த வழியே ஓடி வந்தது அப்போது சாலையோரம் தன் மகனை அழைத்து நடந்து சென்றவர் மீது காட்டு பன்றிகள் மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அப்போது தந்தை விழுந்ததை கண்டு அச்சிறுவன் கதறி அழுதான் இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.