• Tue. May 7th, 2024

மக்களை நலமா என்று கேட்கும் முதலமைச்சர், தமிழக ஜீவாதார உரிமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு வாய் திறந்து விளக்கம் சொல்லாமல் மௌனமாய் இருப்பது ஏன்?

ByN.Ravi

Mar 9, 2024

நீதிமன்றங்கள் கண்டனத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தொடர தார்மீக உரிமை இழந்துவிட்டார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

தமிழ்நாட்டினுடைய திட்டங்களால் பயனடைந்தவர்களை தொடர்பு கொள்ள, கருத்துக்களை கேட்க, நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
எடப்பாடியார் இதுகுறித்து, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை எடுத்து வைத்துள்ளார்.
நீங்கள் நலமா என்று கேட்கும் முதல்வரே, அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேறாமல் போச்சு, சட்டம் ஒழுங்கு சீரழிந்து போச்சு, சொத்து வரி, குடிநீர்வரி, மின்கட்டணம் உயர்ந்து போச்சு, விலைவாசி விண்ணை தொடுகிற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு, போதை பொருள் அதிகமாச்சு, தமிழக வாழ்வாதார உரிமை பறிபோச்சு, என்று இப்படி வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை.
தேர்தலுக்கு, தேர்தல் மட்டுமே நீங்கள் நலமா என்று கேட்கிற முதல்வரே, இன்றைக்கு மக்கள் நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குகளிலே எத்தனை எத்தனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனிதநேயம் உள்ள, மனசாட்சி உள்ள மனிதராக இருப்பவர்களிடம் நீங்கள் நலமா என்று கேட்டால் அவர்கள் எப்படி நலம் என்று சொல்லுவார்கள்.
சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனாக இங்கே தமிழ்நாட்டில் இருக்கிற ஜாபர்க்கு நீங்கள் பதவி கொடுத்து உள்ளீர்கள். உள்துறையை கையில் வைத்து இருக்கிற முதல்வர் இதுவரை மக்களுக்கு எந்த விளக்கம் சொல்லவில்லை.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை
முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்தார்கள், அது குறித்து வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது. அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
பாலாறு அணைகட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது. அது காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்திலேயே கெட்டுப்போன சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை, போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவில்லை, கொலை கொள்ளை கற்பழிப்பு என்று தமிழகம் இன்றைக்கு அதிர்ச்சி கொள்ளாயிருக்கிறது.அரசின் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் நீங்கள் நலமா என்று கேட்டால் எப்படி மக்கள் பதில் சொல்வார்கள்.
அரசின் அதிகார மையப்புள்ளியாக இருக்கிற உதயநிதி ஸ்டாலினை உச்சநீதிமன்றம் இன்றைக்கு கண்டித்து இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மத சுதந்திரத்தை பற்றி பேசி உள்ளீர்கள், இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை, சுதந்திரத்தை மீறி இருக்கிறீர்கள், பேச்சுரிமையிலே மீறி இருக்கிறீர்கள் என்று நீதியரசர் கண்டித்துள்ளார்.
மேலும், பொதுவழியில் வெளியிடும் கருத்துக்கள் உண்மையாக, துல்லியமாக இருக்க வேண்டும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.ஒரு பொறுப்புள்ளவர் இப்படி செயல்படலாமா என்று, உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்
திருக்க பிறகும், அவர் எப்படி அமைச்சர் பதவியில் நீடிக்கிற தார்மீக உரிமையை பெறுகிறார் என்பதுதான் இன்றைய அரசியல் அறிஞர்கள் மக்கள் உடைய கருத்தாக இருக்கிறது.
என்ன செய்வது அதிகார மையத்தின் முக்கிய புள்ளியாக உள்ளார் .இது குறித்து, முதலமைச்சர் வாய் திறந்து விளக்கம் சொல்வாரா? மக்கள் நலமா என்று கேட்க முதலமைச்சர் இதற்கு உரிய பதிலை சொல்லவில்லை.
தொடர்ந்து, நிலைப்பாட்டை தவறுவதற்கு என்ன காரணம் தமிழ்நாடு மக்களுக்கு தெரியவில்லை, இதற்கெல்லாம் நீங்கள் விளக்கம் சொல்லாமல் மௌனம் சாதித்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தக்க பதிலடியை மக்கள் புகட்டுத்
வார்கள் என, கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *