

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு ஏன் என்பது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மத்திய உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசவில்லை.கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது, நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்றுவது பற்றியும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு பற்றி எடுத்துக் கூறினேன். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது பற்றி அமித் ஷாவிடம் கூறினேன்” என்று தெரிவித்தார்.
