• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் சீசன் 6 லிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

ByA.Tamilselvan

Oct 22, 2022

பிக்பாஸில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்கள்.இந்தவாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிநதுள்ளது.தற்போதைய சீசன் 6 துவங்கியுள்ளது.உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
100 நாட்கள் ஓடக் கூடிய இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் இதில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பொருத்து வாரா வாரம் ஒருவர் வீ்ட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். விஜய் டிவியில் இரவு நேரங்களில் பிக்பாஸ் வீ்ட்டில் நடந்த ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகும். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது.இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதன்படி இப்போது கடைசியில் 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் யார் யார் என்றால் ஷெரினா, ஷிவின், மகேஷ்வரி மற்றும் சாந்தி இவர்கள் தான் கடைசியாக உள்ளார்கள். இதில் சாந்தி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் தெளிவாக தெரியவில்லை.