• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யார் இந்த விஸ்வகர்மா குலத்தினர்..??

ByA.Tamilselvan

Sep 13, 2022

உலகம் தோன்றிய போது விஸ்வகர்மா குலத்தினர் முதன் முதலில் தோன்றினர் என்று கருதப்படுகிறது. இவர்களின் தோற்றத்திற்கு இன்றைய நாகரிக உலகமே சான்று என தெரிகிறது.

இரும்பு, மரம், உலோகம், கல், பொன் போன்ற அடிப்படைப் பொருள்களால் உலகம் உருவாக்கப்பட்டன. அதனால் விஸ்வகர்மா குலத்தினர் முதன்முதலில் தோன்றினர். விஸ்வம்’ என்பதற்கு ‘உலகம்’ எனவும், ‘கர்மா’ என்பதற்குப் படைக்கிறவர் என்றும் பொருள்படுகிறது. ‘விஸ்வகர்மா’ என்பதற்கு ‘உலகத்தைப் படைக்கிறவர்’, என்றும் ‘பிரபஞ்சச் சிற்பி’ என்றும், உலகப் படைப்புகளுக்கு அடிப்படையானவர் என்றும் வேதநூல் கூறுகிறது. பிரம்மம், கடவுள் என்னும் தனிச் சொற்கள் பிரபஞ்சத்தைப் படைத்தருளிய பிரம்மத்தை விஸ்வகர்மாவைக் குறிக்கிறது. தேவர்களையும், முனிவர்களையும் படைத்தவர் விஸ்வகர்மா என்றும், அவரே உலகத்தைப் படைத்தவர் என்றும் உறுதியாக சொல்லப்படுகிறது.

விஸ்வகர்மாவின் சந்ததியரான “விஸ்வகர்மப் பிராமணர்கள்” என்ற பெயர் பெற்று, இன்று விஸ்வப்பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பொற்கொல்லராகிய மரபினருக்குப் பிராம்மணப்பட்டம் இந்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. பிரபஞ்சச் சிற்பாச்சாரியாராகிய விஸ்வகர்மா என்பவர் இந்தப் பூமியை உருவாக்கினார் எனவும், படைப்புக் காலத்தில் முதன் முதலில் தோன்றியது நாதம். இந்த நாதமே அனைத்துப் பிரபஞ்சத் தோற்றத்திற்கும் ஆதி காரணமாகும். படைப்பு முற்றுப் பெற்ற பின் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்னும் மூன்று தேவர்களையும் அவர்களுக்கு உகந்த சக்திகளோடு உருவமாய்ப் படைத்து முறைப்படுத்தினார்.

பிரம்மா–சிருஷ்டி-ஆக்கல்
விஷ்ணு–ஸ்திதி-காத்தல்
உருத்திரன்-சம்ஹாரம்-அழித்தல்

விஸ்வகர்மா குலத்தவர் ஐந்து முகங்களை உடைய விஸ்வகர்மா கடவுளையே, தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவரவருக்கு விருப்பமான தெய்வங்களைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர். விஸ்வகர்மா குலத்தவர்கள் தாய்மொழியான தெலுங்கு மொழி பேசுகின்றனர். அதனால், தெலுங்கு வருடப் பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தற்காலத்தில் இக்குலத்தவர்களில் சிலர் தெலுங்கு மொழி பேசுவதில்லை. விஸ்வகர்மா குலத்தவர்கள் 5 பிரவினாராக இருக்கின்றனர். அவர்கள்

*இரும்பு வேலை செய்பவர் (மதுப்பிரம்மா)
*மரவேலை செய்பவர் (மயப்பிரம்மா)
*உலோக வேலை செய்பவர் (துவஷ்டப்பிரம்மா)
*கல்சிற்ப வேலை செய்பவர் (சில்பிபிரம்மா)
*பொன் வேலை செய்பவர் (விஸ்வக்ஞயபிரம்மா)

விஸ்வகர்மா பிராமணர்களின் தொழிலின் அடிப்படையில் ஐவராகப் பிரிக்கப்பட்டனர். இரும்பு (அயம்), மரம் (தாரு), உலோகம் (தாமிரம்), கல்சிற்பம் (சிலை), தங்கம் (பொன்), போன்ற மூலப்பொருள்களை வைத்து ஐந்தொழில்கள் உருவாயின. எல்லா மூலத்தொழில்களைப் பிறப்புரிமையாகக் கொண்ட வேறொரு குலத்தை, இந்நாட்டில் காண்பது மிக அரிது. இப்படி பல கலைகளை இவ்வுலகிற்கு காட்டியதற்கு நம் மத்திய அரசு செப்டம்பர் 17 ஆம் தேதியை விஸ்வகர்மா ஜெயந்தியாக அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.