• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,

குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மீட்கப்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் அவர்கள் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், காணாமல் போன மீனவர்களின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். குளச்சல் நகர செயலாளர் திரு நாகூர்கான், நகர்மன்ற தலைவர் திரு நசீர், முன்னாள் நகர செயலாளர் திரு ரஹீம், மாவட்ட மீனவரணி துணை செயலாளர் திரு பனிக்குருசு, கவுன்சிலர்கள் திரு ஜான்சன், திரு பிரிட்டோ உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.