• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

என் கொடி பறக்காத இடத்தில் இவன் கொடியும் பறக்காது – வி.சி.க

Byமதி

Sep 27, 2021

சமீபத்தில் சேலம்-தருமபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது கே.மோரூர். இந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றுவோம் என ஆரம்பித்த சலசலப்பு, கூட்டணிக்குள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 17ஆம் தேதி சேலம் வந்த அக்கட்சி தலைவர் திருமாவளவன் கே.மோரூரில் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கெனவே அங்கு திமுக, அதிமுக கொடிக் கம்பங்கள் இருப்பதால், இதனால் இடையூறு ஏற்படுவதால் இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என 2 ஆண்டுகளுக்கு முன்பே ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காவல் துறைக்கும் வருவாய் துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் அன்றைய தினம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் கே.மோரூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தடையை மீறி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தடுத்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வி.சி.க வினர் மற்றவர்களின் கொடிகள் பறக்கும் வரை எங்களின் கொடியும் பறக்கும். மற்ற கட்சிகளின் கொடிக்களை அகற்றுங்கள் பின்னர் எங்கள் கொடிக்களை பிடுங்குகள் என்றனர்.
இருப்பினும், அந்தக் கொடிக்கம்பத்தை காவல் துறையினர் பிடுங்கி சென்றனர்.
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினரை கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியே பரபரப்புக்குள்ளானது. அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இதுகுறித்து தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்த திருமாவளவன், பொது இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது, சேலம் மாவட்டம் மோரூரில் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்க அங்கிருந்த சில சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு துணை போகும் வகையில் அங்கிருந்த காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்ற தடை விதித்ததுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். விசிக கொடி ஏற்ற தடை விதித்து சட்டம் ஒழுங்கை சிக்கலாக்கியதுடன் விசிக தொண்டர்கள் மீது தடியடி நடத்தி சாதிவெறியர்களுக்கு துணைபோன, காவல்துறையின் தலித் விரோத போக்கை கண்டித்து வரும் 30-9-2021 புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசபடுத்தும் அரசியல்படுத்தும்.. ஒரு போதும் அச்சப்படுத்தாது என எழுதப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையிலும், கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை விடுவிக்குமாறு காவல் உயரதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏவிடம் பேசியும் பலனில்லை என்று தனது ஆதங்கத்தை நேற்று அவர் பதிவு செய்திருந்த நிலையில் இந்த போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி “கொள்கை வெல்லக் களமாடுவோம்! -ஆளும் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்! மதுரையில்( 2015)நடந்த விசக’வின் வெள்ளிவிழா மாநாட்டில் உரத்து முழங்கிய சிறுத்தைகளின் கொள்கை முழக்கம்.” து டிவிட்டர் பக்கமே அனல் பறந்தது.

இது விசிக திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்தப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அரசு. கே. மோரூர் பகுதியில் இருந்த அனைத்து கட்சிகளின் கொடிகளும் அகட்டப்பட்டது. இதை விடுதலை சிறத்தை கட்சினர் அடைந்த வெய்யரியகப் பார்க்கப்படுகிறது.