மதுரை மாநகர் அவனியாபுரம் 100-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகரில் உள்ள 10-கும் மேற்பட்ட ராணி மங்கம்மாள் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கழிவு நீர் வெளியேறுவதற்கான முறையான வசதிகள் இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் வெளியேறி சாலைகள் முழுவதும் சேரும் சகதியாமாக காணப்படுகிறது.
ராணி மங்கம்மாள் தெருவில் சாக்கடை நீர் மட்டும் வெளியேறிய நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சாக்கடை நீர் மற்றும் மழைநீர் சேர்ந்து சாலை முற்றிலும் சேரும், சகதியும் தேங்கி காணப்படுகிறது. குடியிருப்பவாசிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல், வீட்டை விட்டு வெளியேவும் செல்ல முடியாமல் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

10 வருடங்களாக சாலையை தேடும் ராணி மங்கம்மாள் தெரு மக்கள் கூறியதாவது.
தினமும் சேரும் சகதியும் நிறைந்த இந்த சாலையை பயன்படுத்துவதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் தினமும் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். ஏதேனும் விசேஷ நாட்களில் வீடுகளை விட்டு எங்களால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நேரில் வந்த ஆய்வு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் தினமும் பாதிப்படைந்து வருகின்றோம்.

நூறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியேற்று 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முறையான சாலை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை., 10 வருடங்களுக்கு மேலாக சாலை எங்கே என்று தேடும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும்., சாலை பணிகள் சீர் செய்யாவிட்டால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் மற்றும் உண்ணாவிரதம் இருப்போம் எனவும் டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் ராணி மங்கம்மாள் தெருவில் பலருக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
