விருதுநகர் நகர்புற பகுதிகள் முழுவதும் சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு சுகாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது பழைய பேருந்து நிலையம், மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், புல்லாலக்கோட்டை சாலை,கச்சேரி ரோடு போன்ற அனைத்து பகுதிகளிலும் வாறுகால் திறந்த வெளியில் இருப்பதாலும் சுத்தம் சரிசெய்யாமல் இருப்பதாலும் கொசுக்களின் கூடாரமாக உள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர் நலம் மற்றும் பொது ஜன நலன் விரும்புவோர் கோரிக்கையாக உள்ளது.
