• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி பேசும் போது..,

BySeenu

Dec 3, 2025

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடியே 46 லட்சம் ரூபாய் இந்த வகுப்பு அறைகள் கட்டுவதற்காக நிதியை ஒதுக்கி உள்ளதாகவும், இந்த மகளிர் கல்லூரி துவங்கப்பட்டு சிறிது வருடங்கள் ஆனாலும் கூட அதிகமான எண்ணிக்கையில் இங்கு இருக்கக் கூடிய அத்தனை பாடத் திட்டங்களுக்கும் பெண்கள் முழுமையாக நிரம்பி உள்ளதாகவும், வகுப்பறைகள் நல்ல முறையில் சென்று கொண்டு உள்ளதாகவும், இங்கு கூடுதலாக வகுப்பறைகள் கட்டப்பட்டால் பட்டம் மேற்படிப்பு படிக்கின்ற படிப்புகளுக்கு அனுமதி கிடைப்பதற்கு வசதியாக இருக்கும்.

இளங்கலை பட்டம் மட்டுமல்ல, இந்த கல்லூரியில் முதுகலை பட்டமும் பெறக் கூடிய வாய்ப்பு ஏழைப் பெண்களுக்கும் கிடைக்கும் என்ற காரணத்தால் இன்று 6 புதிய வகுப்பறைகள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் உள்ளிட்ட தனியான ப்ளாக் இருக்கு எம்.எல்.ஏ டெவலப்மெண்ட் நிதி ஒதுக்கி இன்று அந்த வேலையை துவங்கி உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் உயர் கல்வி படிக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை இந்திய அளவில் அதிக சதவீதம் என்றவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கு என ஒரு சூழலை உயர் கல்விக்கு உருவாக்குவதற்கு மிக நீண்ட காலமாக தமிழகத்தில் தனி பெருமை உண்டு என்றும், தனியார் பங்களிப்புகள் அதிகமாகி கொண்டு உள்ள சூழ்நிலைகள் அரசு கல்லூரிகள் தான் ஏழை குழந்தைகளுக்கு ஒரு சலுகை கட்டணங்களில் தரமான உயர்கல்வி வழங்குகின்ற நிறுவனங்களாக உள்ளதாகவும், ஆனால் அவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப தேவைகளுக்கு, ஏற்ப அரசாங்கத்தின் நிதி உதவி கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், தாமதம் ஏற்படுவதாகவும், இதையெல்லாம் புரிந்து கொண்டு தான் இந்த வேலை பெண்களுக்கான அரசு மகளிர் கல்லூரி அடுத்த கட்டத்திற்கு வளர வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சிகளை செய்து கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தவர்,

இது மட்டுமல்லாமல் அரசு கலைக் கல்லூரி இந்தத் தொகுதியில் இருக்கின்ற மற்றொரு கலை கல்லூரிக்கு ஒரு கோடி ரூபாய் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து அங்கு நான்கு வகுப்பறைகளை கட்டிக் கொண்டு உள்ளதாகவும், உயர் கல்வியிலே ஏழை – எளிய மாணவர்கள் பயன் பெறுகின்ற வகையிலே இந்த உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ஒதுக்குவது என்பது மிகுந்த மகிழ்வை கொடுப்பதாக கூறினார்.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு உள்ளதாகவும், இந்த எஸ்.ஐ.ஆர் பணிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களை பதிவு செய்து கொள்வதும், அவர்களுடைய விவரங்களை பதிவேற்றதற்காக அவர்களாகவே தானாக முன்வந்து தேர்தல் நிலை அலுவலர்களை அணுகுவதுமாக, ஒரு உற்சாகமான விதத்தில் வாக்காளர் தீவிர திருத்தம் என்பது நடைபெற்று கொண்டு உள்ளதாக கூறினார். 11 ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ள இந்த கால கட்டத்தில் வாக்காளர்கள் பதிவு செய்கின்ற ஒரு நபர் கூட விடுபடாமல், அத்தனை பேரும் அந்த பட்டியலில் தங்களுடைய பெயர் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா ? என்று ஆன்லைன் வாயிலாகவும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், விண்ணப்பத்தை கொடுத்தோம் மட்டும் என்றும் இல்லாமல், அரசியல் கட்சி முகவர்கள் செய்தாலும், பொதுமக்களும் அந்த பணியினை பார்த்துக் கொண்டால் இந்த பணி என்பது முழுமையாக முடிவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றார்,

தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா கட்சி முழுவீச்சில் மேற்கொண்டு வருவதாகவும், எங்களுடைய அத்தனை சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி மாநாடு வருகின்ற 7 ம் தேதி தமிழக முழுக்க நடைபெற உள்ளதாகவும் இதில் வாக்குச்சாவடி முகவர்கள் கட்சியினுடைய நிர்வாகிகள் கலந்து கொண்டு இப்பொழுது நடைபெற்று இருக்கக் கூடிய எஸ்.ஐ.ஆர் பணிகளிலே தங்களுடைய பங்களிப்பு எப்படி ? இருந்தது என்பதைப் பற்றியும் வரக்கூடிய தேர்தல் எப்படி ? பூத்து கமிட்டி பணிகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக அந்த கூட்டங்களில் அவர்கள் அதற்கென்று சரியான திட்டங்களை தீட்டி பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.

50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,

50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுகிறது என்றால், இரண்டரை லட்சம் வாக்காளர்கள் இருக்கின்ற எங்கள் தொகுதியில் ஒருமுறை கூட 52, 53 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறவில்லை என்றும், ஏனென்றால் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அதிகமாக வீடு மாறுவது, பணிக்காக வந்து கொஞ்ச காலம் இருப்பது, பிறகு சென்று விடுவது, இறந்தவர்கள் பெயரில் எடுத்து அதை சீராக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது நீண்ட காலமாக நடக்கவில்லை என்றும் தெரிவித்தவர், இந்தக் காரணங்களால் இப்பொழுது யார் ? உண்மையான வாக்காளர்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இருப்பார்கள் என்றார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்தான கேள்விக்கு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பன்னெடும் காலமாக இருக்கக் கூடிய இந்துக்களின் கனவு என்றும், இந்து முன்னணி பேரியக்கம் இதற்காக தொடர்ச்சியான போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளை இதற்கான தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தவர், இதில் தி.மு.க அரசு எப்பவுமே இந்துக்களுடைய கோவில்கள் வழிபாட்டு முறைகள் உரிமைகள் என்று சொன்னால் இரண்டாம் பட்சமாக பார்ப்பது தான் வழக்கம் என்றவர், உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் அன்று முருகனுக்கு ஏற்றக் கூடிய தீபத்திற்கு அனுமதி கொடுத்து உள்ளதாகவும், இங்கு எல்லா மதங்களிலும் சமமாக பார்க்கப்பட வேண்டும், எல்லா மதத்தவர்களுக்கும் அவர்களுடைய வழிபாட்டு உரிமைகள் உண்டு, ஆனால் கார்த்திகை தீப தினத்தில் முருகனுடைய மலையில் தீபம் ஏற்றுவதற்கு இவ்வளவு பெரிய போராட்டம் இந்த நாட்டில் நடத்த வேண்டியது உள்ளதாகவும், திராவிட முன்னேற்றக் கழக போன்ற அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மை இன மக்களுக்கு ஏதாவது பிரச்சனையா ? அவர்கள் அமைதியாக இருந்தால் கூட இவர்கள் தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டியவர், ஏனென்றால் அவர்களுக்கு இவர்கள் தான் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடுவதாகவும் கூறியவர், இந்துக்கள் உடைய உரிமைகள், பரிபோகின்ற அளவிற்கு தொடர்ச்சியாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறதாகவும், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு தீபம் ஏற்றுவதற்கு அரசுக்கு மனசு வரவில்லை என்றார்.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு சென்று உள்ளதாகவும், திருப்பரங்குன்றம் மலை என்பது வேறு ஏதேனும் நாட்டில் உள்ளதா ? நம்மூரில் இருக்கின்ற நமது முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அரசாங்கம் மேல்முறையீடு சென்று இந்த பிரச்சனை சிக்கலாக்கப் பார்ப்பதாக கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அங்கு கார்த்திகை தீபம் நல்ல முறையிலே நடக்க வேண்டும் என்றும், கிட்டத்தட்ட 1947 ம் ஆண்டு வரை தீபம் ஏற்றி வந்ததாகவும், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உத்தரவு வந்தும் கூட அமல்படுத்துகின்ற பணியை மேற்கொள்ள வேண்டும், தமிழக அரசு மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்க வேண்டும் என்று நினைப்பது தவறு என்றார்.

டி.டி.வி தினகரனை அழைப்பதற்கு தேவையில்லை என பா.ஜ.க மாநில தலைவர் கூறி உள்ளார். கூட்டணி வலுவில்லாத நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு

வலுவான கூட்டணியா ? அல்லது வலுவில்லாத கூட்டணியா ? இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும் ஏனென்றால் தேர்தல் நெருங்க, நெருங்க யாரால் ? திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிக்க முடியும் என்கின்ற எண்ணத்தில் மக்கள் இருப்பதாகவும், அதனால் அதற்கு வலுவான கூட்டணி என்று சொன்னால் இன்று இருக்கக் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி தான் தி.மு.க வை தோற்கடிக்கின்ற ஒரே கூட்டணி. இதை புரிந்து கொண்டு.

அத்தனை பேரும் இந்த அலங்கோல ஆட்சியை, அரைகுறை ஆட்சியை, திராவிட மாடல் மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியை அனுப்ப வேண்டும் என்றால் அதற்கான வலிமையையும், வளமையும், மக்கள் செல்வாக்கு இருக்கின்ற ஒரே ஒரு கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்றார்.

நம்பரின் எண்ணிக்கை வைத்து பார்த்தாலும், நாங்கள் தான் பலமாக இருக்கிறோம், அதனால் நாங்கள் வலுவிலக்கவில்லை என்றார்.

அ.தி.மு.க, பா.ஜ.க தவிர வேறு எந்த பெரிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை, கூட்டணியில் இருந்த கட்சிகளும் தற்பொழுது இல்லை என்ற கேள்விக்கு

அ.தி.மு.க பெரிய கட்சி இல்லையா ? பி.ஜே.பி பெரிய கட்சி இல்லையா ? அப்பொழுது அங்கு இருக்கின்ற கட்சிகள் மட்டும் பெரிய கட்சிகளோ ? கம்யூனிஸ்ட் பெரிய கட்சியா ? காங்கிரஸ் பெரிய கட்சியா ? எல்லாம் நம்பர்களின் எழுதி வைத்து உள்ளதாகவும் விமர்சித்தார்.

தே.மு.தி.க, பாட்டாளி மக்கள் கட்சி, த.வெ.க கூட்டணி செல்கின்ற சூழல் உருவாகி உள்ளது என்ற கேள்விக்கு

அவர்கள் கூறவில்லை நீங்களே உருவாக்குகிறீர்களா ? அவர்கள் அங்கு செல்வார்கள், இவர்கள் அங்கு செல்வார்கள் என்றும், யார் ? யாரை எப்படி ? பார்க்க வேண்டும் என்பதை டெல்லி தலைமை பார்ப்பார்கள் என்றார்.

ஓ.பி.எஸ், அமிஷாயுடன் சந்திப்பு குறித்தான கேள்விக்கு,

ஒரு மாதம் பொறுங்கள் இதை விட பிரம்மாண்டமான கூட்டணி நாங்கள் கொண்டு வருவோம் என்றார்.

தமிழகத்தில் மும்முனை போட்டிகளுக்கு வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், இந்த மும்முனை போட்டி கடந்த காலத்தில் பார்த்ததாகவும், மூன்றாவது அணி யாருடைய வாக்குகளை அவர்கள் பிரிக்கிறார்கள் என்றும், எப்பொழுதும் தமிழகத்தில் இரண்டு கூட்டணி இல்லாமல் மூன்றாவது கூட்டணிக்கு கொஞ்சம் வாக்குகள் சென்று கொண்டு உள்ளதாகவும், ஒரு காலத்தில் விஜயகாந்த் மற்றும் கமலஹாசன் ஆதனால் இந்த மூன்றாவது அணிக்கு சிறிய வாக்கு வங்கி உள்ளதாக கூறினார். ஆனால் அது எப்பொழுதும் வெற்றி பெற்றதல்ல, தேர்தல் நெருங்க, நெருங்க மக்கள் ரசிப்பார்கள், கூட்டமாக சென்று வேடிக்கை பார்ப்பார்கள். தேர்தல் நெருங்கின்ற போது யாரை ? அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பார்கள். அதற்குப் பிறகு அந்த இடத்தில் இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.

மூன்று முனைப் போட்டியிட்டதாகவும், தற்பொழுது நான்கு முனை போட்டி வாய்ப்புகள் உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சீமான், விஜய், அ.தி.மு.க மற்றும் தி.மு.க வின் வாக்குகள் எந்த வகையிலும் பிரியாது என்ற கேள்விக்கு ?

யார் கூறியது தி.மு.க வாக்குகள் பிரியாது என்று ? இப்பொழுது தி.மு.க கட்சியினரை எப்பொழுது வீட்டுக்கு இவர் போவார். என்று இருப்பதாகவும், அந்த அளவிற்கு அராஜகம் கட்சியிலும், ஆட்சியிலும் நடப்பதாக தெரிவித்தார்.

தி.மு.க வின் ஓட்டு தி.மு.க விற்கு செல்லும் என்று நினைக்காதீர்கள். தி.மு.க வினரே இந்த அரசு எப்படியாவது ? போனால் போகட்டும் என்று மக்கள் நினைப்பதாக கூறினார்.

இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சி என்பது அனைத்தும் பேசு பொருளாக உள்ளது அதற்கான சாத்தியம் உள்ளதா ? என்ற கேள்விக்கு

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியை பற்றி நீண்ட நாள் பேசிக் கொண்டு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி கூட கூட்டணி பற்றி பேசியதாகவும், கூட்டணி ஆட்சி என்பது ஒரு கருத்து இருந்து கொண்டு தான் உள்ளது. அதற்கான சூழல் வரும் பொழுது பார்க்கலாம் என்றார்

பா.ஜ.க வினர் தான் தமிழகத்தில் கூட்டணியை ஆரம்பித்தது என்ற கேள்விக்கு

தி.மு.க வின் அரசின் கூட்டணியில் உள்ள அனைவரும் பாவம், கூட்டணியில் இருக்கின்ற எம்.எல்.ஏ வும் அதைத் தான் கூறுகிறார். பெயர் தான் கூட்டணி எங்களுக்கு ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார்கள்.

கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க விற்கு வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு

2026 தேர்தல் முடிந்த பிறகு அதற்கு பற்றி எல்லாம் பேசலாம் எனது தெரிவித்தார்.

பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கிய இடங்களில் மாற்று மதத்தினர் நிற்பது குறித்தான கேள்விக்கு

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் மதம் மாறிவிட்டார். அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அந்தப் பட்டியல் இனத்திற்கு கொடுக்கின்ற சலுகைகள் உரிமைகளை அனுபவிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை சட்டமும் அதை தான் கூறுகிறது. ஆனால் சட்டத்தை எப்படியாவது ? ஏமாற்றிக் கொண்டு இருப்பதாகவும், நிறைய இடங்களில் இந்து என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்து என்ற சான்றிதழை பெற்றுக் கொண்டு தேர்தலில் நிற்பதாகவும், ஆனால் வெளிப்படையாக மாற்று மதத்தினர் நிகழ்ச்சியில் சென்று தான் அந்த மதத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லில் கொண்டு உள்ளதாகவும், அதை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் பொழுது, நீதிமன்றம் தெளிவாக கூறுவதாகவும் ஏன் ? இந்து மதத்தில் தான் தீண்டாமை கொடுமை இருக்கு, இந்து மதத்தில் எல்லாம் பாகுபாடு இருக்கு என்று சொல்லி தான் அந்த மக்களுக்கு தனியான இட ஒதுக்கீடு கொண்டு வந்து அவர்களை பாதுகாப்பதாகவும், உரிமைகளை சேர்ப்பதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் பல்வேறு திட்டங்கள் அந்த மக்களுக்காக கொடுக்கப்படுவதாகவும்,

ஆனால் எங்கள் மதத்தை மாறிவிட்டால் ஜாதி வித்தியாசம் கிடையாது என்று கூறி மதம் மாறிவிட்டு. திரும்பவும் மதம் மாறிய பின்பு பட்டியல் இனத்திற்கு சார்ந்தவர்கள் தனியாக சுடுகாடு, தனியாக சர்ச் இதுபோன்ற நிறைய விஷயங்கள் தற்போது பார்த்துக் கொண்டு உள்ளதாகவும், அப்பொழுது அரசியல் அமைப்புச் சட்டம் இந்து பட்டியலின சார்ந்தவர்களுக்கு கொடுக்கின்ற உரிமைகளை மதம் மாறிவிட்டு அவர்கள் அனுபவிக்கின்ற போது சட்டத்திற்கு எதிரானது என்றும் அதைத் தான் பல்வேறு தீர்ப்புகள் கூறிக் கொண்டு உள்ளதாகவும் அதை பற்றிய விழிப்புணர்வு தற்பொழுது தான் மக்களுக்கு வந்து கொண்டு உள்ளதாக கூறினார்.