• Sat. Apr 27th, 2024

பக்தர்களுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி எப்போது?

ByA.Tamilselvan

Nov 16, 2022

சபரி மலை கோயிலில் மண்டலபூஜையை முன்னிட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை காலம். இதனை முன்னிட்டு இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே நாளை முதல் பெருவழிப்பாதை, சிறு வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் 27ஆம் தேதி மண்டல அபிஷேகத்தை அடுத்து கோயில் நடை சாத்தபடும்.
அதன் பிறகு, மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். கொரோனா அச்சம் நீங்கி இருப்பதால் ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எருமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *