பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகியுள்ளது.மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக ரிலீஸ் ஆனது.இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் முதல் பாகத்தைப் போல் இப்படம் வசூலை வாரிக்குவிக்கவில்லை.
அந்த வகையில் இப்படம் ரிலீஸ் ஆகி . 25 நாட்களில் ரூ.350 கோடி வசூலை கூட நெருங்க முடியாமல் திணறி வருகிறது இப்படம். பொன்னியின் செல்வன் 2 எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு முதல் வாரத்தில் அமோக வரவேற்பு கிடைத்தாலும் போகப் போக வசூல் குறைய தொடங்கியது. அதன்படி இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.115 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாட்டில் 205 கோடிக்கு மேல் வசூலித்தது. அதோடு ஒப்பிடுகையில் பொன்னியின் செல்வன் 2 சுமார் 90 கோடி குறைவாக வசூலித்து உள்ளது.தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ.53 கோடி வசூலித்து உள்ளது. இதில் கேரளாவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.22 கோடி வசூலை இப்படம்குவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த முறை அங்கு வசூலை அள்ள வேண்டும் என்கிற முனைப்பில் புரமோஷன் பணிகளை சற்று தீவிரமாக மேற்கொண்டு இருந்தனர். இருந்தும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வட இந்தியாவில் குறைவான வசூலையே பெற்றுள்ளது. இப்படம் ரூ.50 கோடி கூட வசூலிக்கவில்லை.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் தான் வெளியிட்டது. இப்படம் இந்தியா தவிர்த்து இதர நாடுகளில் மொத்தமாக ரூ.125 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தான் அதிகளவிலான வசூல் கிடைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.43 கோடி வசூலித்து உள்ளது.
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]