• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் ?

ByA.Tamilselvan

Jul 5, 2022

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணபித்து வருகின்றனர். .தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைகால தடையை நீக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவரசம் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம் வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ம் தேதியே விசாரிக்கப்படும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.