• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு ? அதிர்ச்சி தகவல்

ByA.Tamilselvan

Nov 24, 2022

நடிகை சமந்த உடல்நலகுறைவு காரணமாக மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் சாதனை பெண்ணாக இருக்கும் இவருக்கு, திருமண வாழ்க்கை கைகொடுக்கவில்லை. பிரபல நடிகரை திருமணம் செய்துகொண்ட சமந்தா அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி குறித்து சில நாட்களுக்கு முன் முதல் முறையாக பதிவிட்டார்.சமந்தா. அதில், “Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை அதாவது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது இருப்பது கண்டறியப்பட்டது. முழுமையாக குணமடைந்த பிறகு தெரிவிக்கலாம் என தான் நினைத்திருந்ததாகவும், ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும் என்பதால் தனது ரசிகர்களிடம் தற்போது தெரிவிப்பதாகவும் சமந்தா கூறியிருந்தார்.
ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு சமந்தா டப்பிங் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தநிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் கவலையை கொடுத்துள்ளது.
தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் தான் நடித்து வெளிவந்த யசோதா படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட சிகிச்சையில் இருந்தபடி கலந்துகொண்டார்.இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு இன்று திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாம்.மேலும், தற்போது சமந்தா நன்றாக இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.