விழுப்புரம் மாவட்டதில் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரியலுார் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, கலந்துகொண்டு,வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 3814 பயனாளி களுக்கு ரூ.45,76,800 மதிப்பில் ஓய்வூதியங்களும், சிறப்பு வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு ரூ.85,86,769 மதிப்பில் இணையவழி பட்டாக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.26,760 மதிப்பில் தையல் இயந்திரங் களும்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத் துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.25,170 மதிப்பில் தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 20 பயனாளி களுக்கு ரூ.85,260 மதிப்பில் காதொலி கருவி மற்றும் ஊன்று கோல், வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.20,78,829 மதிப்பில் வேளாண் இயந்திங்கள் / கருவிகளும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.37,82,000 மதிப்பில் மானியத்துடன் கூடிய தொழிற்கடன்களும், கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.16,50,786 மதிப்பில் பயிர்கடன்களும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.53,000 மதிப்பில் கல்வி உதவித் தொகை (ம) ஓய்வூதியங்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.1,09,915 மதிப்பில் தையல் இயந்திரம் (ம) முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் என மொத்தம் 4041 பயனாளிகளுக்கு ரூ.2,09,75,289 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்பொ.இரத்தினசாமி வழங்கினார்.இந்நிகழ்ச்சி யில்,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கு.சின்னப்பா ,ஜெயங்கொண்டம்சட்டமன்றஉறுப்பினர்க.சொ.க.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மனோகரன், வருவாய்கோட்டாட்சியர்கள்செல்வி.பிரேமி(அரியலூர்),ஆர்.ஷீஜா(உடையார்பாளையம்),வருவாய்வட்டாச்சியர்கள்முத்துலெட்சுமி ,வேலுமணி ,சம்பத், மாவட்ட நிலை அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











