கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வருகின்ற மே 12ஆம் தேதி ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் உதவிகள் வழங்கி எளியோருக்கு ஏற்றம் தரும்_விழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும்.
எடப்பாடியார் தலைமையில் அம்மா புனித ஆட்சியை மீண்டும் மலரச் செய்திட அயராவது பாடுபடுவோம். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கழக அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கழக அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், ஆலோசனை கூட்டம் மதுரையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், கழக அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி .உதயகுமார் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன் ,ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், அன்னபூர்ண தங்கராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், வக்கீல் திருப்பதி, வக்கீல் தமிழ்செல்வன், உஷா ஒன்றிய கழக நகர் கழக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ராஜா, பிச்சை ராஜன், பூம ராஜா, பாலசுப்பிரமணி, வாசிமலை மாவட்ட நிர்வாகிகள் தமிழழகன், கவி, காசிமாயன் செல்லம்பட்டி ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனித புனிதர், புரட்சித் தலைவர், எம்ஜிஆர், தமிழர் குலசாமி , இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களின் மறுவடிவம். சாமானிய முதல்வராய் சரித்திர படைத்திட்ட 2 கோடி தொண்டர்களின் பாதுகாவலர், 8 கோடி தமிழக மக்களின் காவல்அரண், வீரத்தின் விளைநிலம்,வெற்றியின் பிறப்பிடம், கருணையில் இருப்பிடம்,கழக நிரந்தர பொது செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், வருங்கால முதலமைச்சர், புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களின், பிறந்தநாளான வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி நன்நாளில், ஏழை எளியவர்கள் பயன் பெறும் வகையில், கழக அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் திருப்பெயரில் ஆலயங்கள் தோறும் சர்வ சமய பிரார்த்தனைகளும், ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள், கிராமங்கள் தோறும் தொடர் அன்னதானங்கள், மருத்துவ முகாம்,இரத்ததான முகாம், பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டி, கோலப் போட்டி, உள்ளிட்டவைகளை சிறப்பாக மிக எழுச்சியோடு நடத்தி, புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் 71 பிறந்த நாள் விழாவினை “எளியோருக்கு ஏற்றம் தரும் விழவாக” கொண்டாடப்படும் என்று, இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை தனதாக்கிக் கொண்டு புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தெய்வங்களின் நல்லாசியோடு, கழகத்தை கண் இமை போல கட்டி காத்து, தமிழக உரிமைகள், தமிழக இனத்தை காக்க தன்னையே அர்ப்பணித்து, நெருப்பாற்றில் நீந்தி தொடர்ந்து உழைத்து வரும் சமூக நீதி காவலர் எடப்பாடியார். இன்றைக்கு,தீர்மானம் போடுவது, குழுக்கள் அமைப்பது என இது தவிர எந்த நடவடிக்கை எடுக்காமல் வெறும் நகைசுவை நாடகத்தை நடத்தியதை தவிர வேறு எந்த வேலையும் இந்த திமுகஆட்சியில் நடக்கவில்லை என்பதுதான் உண்மையான களநிலவரம்.

மக்களை வாட்டி வதைக்கும் இந்த கொடுங்கோல் சர்வாதிகார ஸ்டாலின் திமுக அரசில் நடைபெறும் கமிஷன் ,கரப்ஷன், கலெக்ஷன் சட்ட ஒழுங்கு சீரழிவு,போதை பொருள் நடமாட்டம் ,பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், என ஸ்டாலின் அவல ஆட்சியை நெஞ்சுறுத்துடன் தட்டிகேட்டு சிம்ம சொப்பனமாய் திகழம் சிங்கநிகர் தலைவர் எடப்பாடியார் இந்திய அரசியல் வரலாற்றில் எந்த மாநில அரசும் செய்திடாத வகையில், அம்மாவின் புனித ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், 7.5 சகவீத இட ஒதுக்கீடு,குடிமாரமத்து திட்டம் ,6 புதிய மாவட்டங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2300 ஏக்கர் நிலம்ஒதுக்கீடு, உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகன திட்டம், 2500 ரூபாய் பொங்கல் பரிசு, 2000 அம்மா மினி கிளினிக்,விவசாயிகள் பயிர்கடன் ரத்து, அம்மாவின் திட்டங்களான மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் ,மகப்பேறு திட்டம் இது போன்று அள்ள, அள்ள குறையாத அட்சயபாத்திரம் பாத்திரம் போல திட்டங்களை வாரி வாரி வழங்கி வரலாற்று சாதனை படைத்த வரலாற்று நாயகன் எடப்பாடியார்.
தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றி காட்டி ,சாதனை திட்டங்கள் மூலம் இந்திய தேசத்திற்கே ஒரு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய எடப்பாடியாரின் இமாலய சாதனை திட்டங்களையும், விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை திண்ணை பிரச்சாரத்தின் மூலம் கிராமங்கள் தோறும் வீடு, வீடாக வாக்காளர்களிடத்தில் எடுத்து செல்லும் இந்த புனித பணியை உணர்வோடு மேற்கொண்டு நாம் தமிழினத்தின் உரிமையை மீட்டெடுத்து மீண்டும் புரட்சித்தமிழர் எடப்பாடி தலைமையில் அம்மாவின் புனித ஆட்சியை மலர் செய்வோம்.

வருகின்ற 2026 ஆண்டு மே 12ஆம் தேதி புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் 72வது பிறந்தநாள் விழாவின் போது, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தெய்வங்களின் அருள் ஆசையோடு தமிழக மக்களின் பேராதரோடு
எடப்பாடியார் முதலமைச்சர் அரியணையில் நிச்சயம் இருப்பார்.
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதை போல அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக விசுவாச தொண்டர் படை உண், உறக்கம் பாராது, இரவு, பகல் பாராது கண் துஞ்சாமல் அயராவது பாடுபடும் என இக்கூட்டம் சூளுரை ஏற்கிறது.