சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 1102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக 194வது (அ) வட்ட திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் 1102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ. அரவிந்த் ரமேஷ்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்.., மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா பற்றி கூறுகையில், எந்த நிகழ்ச்சியை செய்தாலும் அதில் வெகு சிறப்பாகவும், புதுமையாக செய்யக்கூடிய மாமன்ற உறுப்பினரையும், வட்டச் செயலாளரையும் வெகுவாக பாராட்டினர். அதனைத் தொடர்ந்து தன் தொகுதி மக்களுக்காக மாமன்ற உறுப்பினர் விமலா கர்ண மாதந்தோறும் நடக்கும் மாமன்ற கூட்டத்தில் தங்கள் தொகுதியில் உள்ள குறைகளை மாமன்ற கூட்டத்தில் வெகு சிறப்பாக பேசி அனைவரையும் கவரக்கூடிய வகையில் தன் சிறப்பான பேச்சாற்றலால் மாமன்ற கூட்டத்தில் பேசி, தங்கள் மக்கள் குறைகளை எடுத்துரைப்பார் என்று அமைச்சர் வெகுவாக பாராட்டினார்.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேசுகையில்.., இந்த மாமன்ற உறுப்பினரும், வட்டச் செயலாளர் கணவன், மனைவி இருவரும் இணைந்து இந்த தொகுதி மக்களுக்காக என்னென்ன குறைகள் அதை நிவர்த்தி செய்யுமாறு, வெகு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று, எந்த வேலையா இருந்தாலும் இருவரும் இணைந்து நேரில் சென்று அந்த குறைகளை மக்களிடையே, உடனுக்குடன் செய்து, மக்கள் பாராட்டையும் பெறக்கூடிய வகையில், இவர்கள் இருவரும், பணி சிறப்பாக செய்கிறார்கள் என்று எம்எல்ஏ பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மண்டலம் 15 மண்டல குழு தலைவர் மதியழகன் கல்வி நிலை குழு தலைவர் விஸ்வநாதன் கட்சி நிர்வாகிகள் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.