மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளுக்காக நிதி திரட்டும் வகையில், ஏகல் மகிளா சமிதி மகளிர் அமைப்பினர் மற்றும் ட்ரைபிள் சொசைட்டி நண்பர்கள் இணைந்து விற்பனை மற்றும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற்றது.
பழங்குடி இன மலைவாழ் மக்களின் நலன் சார்ந்து ஏக்கல் மகிளா அமைப்பினர் கல்வி, ஆரோக்கியம், மருத்துவம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மலை வாழ் மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் கூஸ் பம்ப்ஸ் எனும் பொழுதுபோக்கு விற்பனை கண்காட்சி கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள சிந்தி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஒரு நாள் கண்காட்சியாக நடைபெற்ற இதில் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகள், உணவு அரங்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடை, அணகலன்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக சாய் கோபால்ஜீ, ஜெயஸ்ரீ பிரசாத், ஸ்ரீ கோபால் மகேஸ்வரி, மகாலஷ்மி அருள் மொழி வர்மன், உமாசங்கர், கம்லேஷ் ரஹேஜா, ராஜேஷ் லுந்த், நானிக் சச்தேவ், சிந்தி சர்வதேச பள்ளி முதல்வர் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.








