மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-யின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி தொகுதியில் உள்ள சுடுகாட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர் என தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.,

கடைகோடியில் மக்களின் வாழ்வில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களை கண்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன்., இன்று உசிலம்பட்டி தொகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி – யின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.,
உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், நகர செயலாளர் தங்கப்பாண்டியன் இணைந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வழங்கினர்.,