தேநீர் கடையில் நடைபெற்ற வெல்டிங் வேலையை நிறுத்தி அடாவடி செய்த தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர்.
கேரளாவில் இருந்து வந்து இங்கு நீ எப்படி இந்த வேலையை செய்யலாம் 50000 ரூபாயை மாமுலாக கொடுத்துவிட்டு வேலையை தொடங்கு என வேலை செய்த ஊழியரை அடிக்க முற்பட்ட சங்கத் தலைவர் வெங்கடேசனால் பரபரப்பு.

குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் பாவாஜி கப்பெட்டேரியா என்ற தேனீர் அங்காடி கடந்த 9வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனீர் அங்காடியில் புதுப்பித்தல் வேலைகளை செய்ய கடையின் உரிமையாளர் முகமது நிசார் தனது சொந்தக்காரராண கேரளாவை சேர்ந்த நாசர் என்பவரை அழைத்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் என்று கூறி வளம் வரும் வெங்கடேசன் என்பவர் தேநீர் அங்காடிக்கு வந்து நீ எப்படி இங்கு வேலை செய்யலாம நாங்க ஜி.எஸ்.டி கட்டிட்டு இருக்கோம் என கேட்டு தகாத வார்த்தைகளால் தேனீர் அங்காடியில் வேலை செய்து கொண்டிருந்த நாசரை திட்டியதோடு அவரை மார்பின் மீது கைவைத்து தள்ளி அடிக்க முற்பட்டுள்ளார்.
வேற்று மாநிலத்தை சேர்ந்த நீ இங்க வந்து வேலை செய்வ நாங்க ஊ… என்று தகாத வார்தைகளால் பேசிய வெங்கடேசனிடம் கடை இடத்தின் உரிமையாளர் பேச முற்பட்ட போது பெண் என கூட பார்க்காமல் தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார் வெங்கடேசன்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் கடையின் உரிமையாளர் இருவரும் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

வெல்டிங் உரிமையாளர்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வெங்கடேசன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் 50,000 கொடு என மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தோடு மட்டுமல்லாமல் அடிக்க முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.