• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு…

Byகுமார்

Jan 11, 2025

இந்தியா – அமெரிக்கா இடையே நல்லெண்ணம் கலாசாரத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க ரோட்டரி நல்லெண்ண தூதர்கள் மதுரை வருகை… விமான நிலையத்தில் பாரம்பரிய முறையில் மாலையணிவித்து மஞ்சள் கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சர்வதேச அளவில் உலகநாடுகளிடைய நட்புணர்வு மற்றும் கலாச்சார உறவுகள் குறித்த ரோட்டரி நட்புணர்வு மற்றும் நல்லெண்ண தூதர்கள் மதுரை வருகை புரிந்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ரோட்டரி முன்னாள் ஆளுநர்கள் ஜெனிக் குர்த், பிலிப்பி லெமோஸ் உட்பட ஏழு பேர் கலாச்சார நட்புணர்வு பயணமாக மதுரை வருகை புரிந்துள்ளனர்.

மதுரை விமான நிலையம் வந்த அமெரிக்க கலாச்சார நட்புணர்வு நண்பர்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்த சாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் வரவேற்பு குழு தலைவர் ரவி பார்த்தசாரதி, வினோதன், மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர்தாஸ், செயலாளர் பிரவின்குமார் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு, செயலாளர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் மஞ்சள் கொத்து கொடுத்தும் அவர்களை வரவேற்றனர்.

மதுரை விமான நிலையத்தில் வரவேற்பை பெற்று கொண்ட அவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்க கூறினர்.

மதுரை வந்த அமெரிக்க நாட்டை சேர்ந்த ரோட்டரி சங்கத்தினர் மதுரை மக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திடவும், ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நலத்திட்டங்கள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் நமது கலாச்சாரம் பண்பாட்டை அறிந்து கொள்ளவும், கிராம மக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். அதோடு தமிழரின் வீரவிளையாட்டாகக் கருதப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காணவும் வருகை புரிந்துள்ளனர்.