• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

Byvignesh.P

May 28, 2022

மதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் 21750ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல்
12 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட மதுரை தேனி இடையிலான பயணியர் விரைவு ரயிலில் மகிழ்ச்சியுடன் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்றுள்ளனர் அதன் மூலம் பெற்ற வருமானம் ரூபாய் 14940 ஆகும்.
வடபழஞ்சியிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 1590 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள் ரூபாய் 3270 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூபாய் 1950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். இன்று இந்த ரயிலில் மொத்தமாக 574 பயணிகள் பயணம் செய்ததில் ரூபாய் 21750 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் காலை ,மாலை மட்டுமல்லாது பகலிலும் கூடுதலாக ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.