கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில், துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல், அஸ்வின் மருத்துவமனை இயக்குனர் அஸ்வின், தாளாளர் சாந்தி தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் நந்தகுமார் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தங்கவேலு, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தம்முடைய இந்த வெற்றி விடா முயற்சியால் வந்தது என குறிப்பிட்டார்.
எனவே மாணவர்கள் தங்களுடைய இலக்கை அடையும் வரை கல்லூரி காலங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பல்வேறு துறைகளில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,சமூக முன்னேற்றத்திற்கு பொறியியல் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர்,வாழ்வின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து செல்வதில் பொறியியல் துறை முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
எனவே தங்களது பிள்ளைகளை இந்த பொறியியல் கல்லூரியில் சேர்த்த பெற்றோர்கள் நல்ல முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, அவர் கல்லூரியில் பயிலும் காலகட்டங்களில் மாணவ,மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் கல்வி பயிலும் போதே தங்களது பன்முக திறமைகளை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இறுதியாக முனைவர் நித்யபிரகாஷ் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.