• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்போம் : அன்புமணி

ByA.Tamilselvan

May 26, 2023

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம் என பதிவிட்டுள்ளார்
புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கின்றன. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.