• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யுனிட் அனுப்ப மாட்டோம் ..,

Byஜெ.துரை

Apr 15, 2025

தென்னிந்திய சினிமா & டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன் இன்று முதல் படப்பிடிப்புக்கு அவுட்டோர் யூனிட் அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

அவுட்டோர் யூனிட் என்பது கேமரா, லைட்ஸ், ஜெனரேட்டர், ஜிம்மி, பேந்தர், கிரிப்ஸ் மற்றும் ஒளிப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் ஒரு தனி முதலாளி அமைப்பாகும்.

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலை திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து தொழில் செய்து, தற்போது 100 உறுப்பினர்களுடன் தென்னிந்திய சினிமா அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் அசோசியேஷன் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த சங்கத்துக்கும், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத்துக்கும் எவ்வித தொழில் ஒப்பந்தமும் கிடையாது.

திரைத்துறையின் நலனுக்காக தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும், லைட்மேன் சங்கம் மற்றும் டெக்னிசியன் சங்கம் ஆகிய இரு சங்க உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

தொழில் யாருக்கும் பாதிப்புமின்றி நடந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் சம்மேளத்தின் நிர்வாகிகளாக R.K. செல்வமணி, சுவாமிநாதன் ஆகியோர் வந்த பிறகு கடந்த 6 வருடங்களுக்கு முன் எங்கள் அவுட்டோர் யூனிட்டுக்கு மட்டும் தொழில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுகளை தமிழகத்துக்கு வரவழைத்து தொழில் செய்வதற்கு அவர்கள் இருவரும் உறுதுணையாய் செயல் பட்டனர்.

தமிழ் திரையை மட்டுமே நம்பி தொழில் செய்து கொண்டிருக்கம் எங்கள் உறுப்பினர்களின் தொழில் ஆதாரத்தை முடக்க செய்வதற்கான அவர்கள் செய்த முதல் வேலையாகும். தமிழ் என்றும். தமிழர்களின் வேலைக்காக மட்டுமே பாடுபடுபவர்கள் என்றும் கூறும் அவர்கள் முதலில் தமிழர்களான தமிழகத்தில் மட்டுமே தொழில் செய்யும் எங்களுக்கு தொழில் இழப்பை ஏற்படுத்தியதோடு, வெளிமாநில அவுட்டோர் யூனிட்டிடம் 40% க்கு 60%வது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இங்குள்ள பெப்சி தொழிலாளருக்கும் வேலை இழப்பை தங்ளது சுயலாபத்துக்காக ஏற்படுத்திவிட்டனர்.

இதை கட்டுப்படுத்த பல கட்ட சந்திப்புகள், கூட்டங்கள் நடத்தியும் இன்றுவரை அதற்க்கான தீர்வு காணபடவில்லை.

தற்பொழுது மேற்சொன்ன பிரச்சினை போதாதென்று, தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும், ஏற்பட்ட மோதலினால். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிய தொழிலாளர் சம்மேளனம் உருவாக ஒத்துழைப்பு கொடுக்கிறது. அனைவருக்கும் வேலை மற்றும் தொழில் கொடுத்து பணம் கொடுப்பவர்கள் அவர்கள்தான், தயாரிப்பாளர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் அவர்கள் வேண்டுகோள் வைக்கும் போது நாங்களும் அதை ஒப்புக்கொள்ளவேண்டி இருக்கிறது. இதை பொருத்துக்கொள்ளாத பெப்சி தலைமை, லைட்மென் சங்கத்தை எங்கள் தொழிலுக்கு எதிராக தூண்டிவிட்டு. படப்பிடிப்புக்கு உபகரணங்கள் செல்ல விடாமல் தடுக்கிறார்கள்,

இதனால் கடந்த 07.04.25 முதல் தொடர்ந்து அவர்களால் பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. எங்களின் மூன்று உறுப்பினர்களுக்கு, Non-Coperation அறிவித்திருக்கிறார்கள். எங்களது மற்ற ஒரு உறுப்பினர் தயாரிக்கும் திரைப்பட படப்பிடிப்பு நடை பெறும் தளத்துக்கே சென்று, மின் விளக்குகளை கீழே தள்ளி. தடுக்க வந்தவரை அடித்து. பெரும் கலாட்டா செய்திருக்கிறார்கள். வேலை கொடுப்பவர்களையே, தரம் தாழ்ந்து பேசுவதும், உபகரணங்களை சேதம் ஏற்படுத்துவதும், தடுக்க வருபவரை அடிப்பதும், சரியான செயலா??? இதற்கெல்லாம் காரணமான பெப்ஸி நிர்வாகம் என்ன சொல்ல போகிறது??? பெப்ஸி தலைமையின் தவறான வழிகாட்டுதலால், ஏதுமறியாத ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்யப்போகிறார்கள்.

திரைத்துறையில் உள்ள அனைவரும் தாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு பெப்ஸி நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
எங்களால் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை.

இதற்கெல்லாம் தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே, எங்களது அவுட்டோர் யூனிட் அசோசியேஷன், உபகரணங்களை படப்பிடிப்புகளுக்கு அனுப்புவதில்லை என்கிற தவிர்க்க முடியாத முடிவுக்கு வந்துள்ளது.

15.04.2025 – இன்று முதல் சினிமா, தொலைக்காட்சி, வெப் சீரியஸ், விளம்பர படங்கள் எதற்கும் எங்களின் அவுட்டோர் யூனிட் பொருட்களை அனுப்ப மாட்டோம்.என்று தெரிவித்துள்ளனர்.