இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதிப்பை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தேனி விளையாட்டு கழகம் சார்பில் “அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்” என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது

தேனியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு அமெரிக்க நாட்டின் தின்பண்டங்கள், மற்றும் கொக்கோகோலா, பெப்சி, மிரண்டா உள்ளிட்ட அந்நாட்டின் குளிர்பானங்களை குப்பையில் ஊற்றி அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷங்களை எழுப்பினர்
“அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்”
“இந்திய பொருட்களை உபயோகிப்போம்” என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்
அமெரிக்க நாட்டின் 50 சதவீத வரி விதிப்பால் தேனி மாவட்டத்தில் நூற்பாலை தொழிற்சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே அமெரிக்க பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இந்திய பொருட்களை பயன்படுத்த பொதுமக்கள் முன் வர வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.