தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து பிரச்சார ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை நாங்கள் பிரதிபலிக்கிறோம் இதுகுறித்து காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம் அவர்கள் அது குறித்து முடிவெடுப்பார்கள்.

கரூர் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும்.
கரூர் சம்பவத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை தவெக கட்சிக்கும் உள்ளது, தமிழக அரசுக்கும் உள்ளது.
கரூர் துயரச் சம்பவம் குறித்து தமிழர் முதலமைச்சரிடமும், தவெக தலைவர் விஜய்யிடமும் ராகுல் காந்தி கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரங்கலை தெரிவித்து நிவாரண உதவி வழங்கியுள்ளார் ஆனால் இதில் அரசியலை புகுத்த விரும்பவில்லை.