சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடுவதாகவும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து புகார் அளித்தும் தேனூர்ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இல்லையென பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை அருகில் சாலை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் ஆறாக சாலையில் ஓடுகிறது இது குறித்து ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் குடிநீர் குழாய் உடைப்பின் மூலம் வெளியேறும் குடிநீரானது சாலையில் ஆறாக ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


மேலும் அருகில் வழிபாட்டு தளம் இருப்பதால் குடிநீரில் கழிவு நீர் தேங்கி இருக்கும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் வீணாகும் குடிநீர் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் சென்று சேர்வதால் மேல்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீரும் மாசுபடும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் ஆகையால் 10 நாட்களுக்கு மேலாக வீணாகும் குடிநீரை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




