• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்:

ByKalamegam Viswanathan

Feb 4, 2024

தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்:

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள்,சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படும்.

மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய நெகிழிக்குடுவைகள் மண்ணிற்குள் சென்று மக்காத நிலை ஏற்படும் முன் அவற்றினை சேகரித்து, அவற்றில் தானியங்கள் மற்றும் தண்ணீர் நிரப்பி நாம் தினமும் செல்லக்கூடிய பகுதிகளில் மரங்களில் வைத்து வரும் பணி இன்று சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் மாணவர்களுக்கு நெகிழி குறித்து எடுத்துரைத்து மாணவர்களது கரங்களினால் துவங்கினேன். இப்பணியின் மூலமாக பல்லுயிர்களும் பயன்பெறும் இயற்கையினை பாதுகாக்க முடியும்.