

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி தொடர்கிறது ராமராஜபுரம் ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை காரணமாக முளைத்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி வைகை நதி கரையோரத்தில் விளையும் 35 ஆயிரம் டன் நெல்லை விவசாயிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

17% ஈரப்பதமுள்ள நெல்லை தான் எடுப்போம் என்று அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவிப்பதால், தொடர் மழையில் நனைந்து நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதமாக உயரும் அவலம் உள்ளது. மேலும் தனியார் வியாபாரிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள். அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகளை கொள்முதல் செய்ய நிர்பந்திக்கும் விதமாக கூட்டணி அமைத்து செயல்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.