• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு நகர்மன்ற தலைவர் எந்த ஒரு நிதியும் ஒதுக்குவதில்லை.


தான் ஒரு சுயேச்சை வேட்பாளர் என்பதே இதற்குக் காரணம் மற்ற வார்டுகளில் உள்ள திமுக உறுப்பினர்களுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதாகவும் தனது வாட்டுக்கு மட்டும் எந்த ஒரு வளர்ச்சிப் பணியும் இந்த 15 மாதங்களில் நடைபெறவில்லை உடனடியாக தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்க வேண்டும், தெருவிளக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து தேவர் சோலை பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் தேவர் சோலைபேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது…