• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

படத்தில் இவ்வளவு வன்முறை வேண்டுமா… சர்ச்சையில் சாணி காயிதம்

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் படம், அமேசான் பிரைம் ஓடிடியில் மே 6 அன்று நேரடியாக வெளியாகிறது. இசை – சாம் சி.எஸ், ஒளிப்பதிவு – யாமினி.

செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் நடித்திருப்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் இந்த அளவுக்கு வன்முறை கொலை காட்சிகள் எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீப காலங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் இது போன்ற வன்முறை காட்சிகள் நிர்வாண காட்சிகள், ஆபாச வார்த்தைகள் என தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியாகிறது.

இந்த போக்கு தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை.