ஓராண்டுக்கு மேலாக ஆணை பிறப்பித்தும் உதவித்தொகை பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளி. சமூக பாதுகாப்புத் திட்டம் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டம் தேனி மாவட்டம், தேனி தாலுகா, வீரபாண்டி பேராட்சி பகுதியில்
மாரியப்பன் மகன் ஈஸ்வரன் ஓய்வூதியம் வழங்க சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 19.10.2023 ஆணையிடப்பட்டுள்ளது.
வீரபாண்டி கிராமத்தில் வசிக்கும் ஈஸ்வரன் மாதம் ரூ.1500/-(ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு மட்டும்) மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
ஓய்வூதியத் தொகை மனுதாரருக்கு தகுதி உள்ள வரை வழங்கப்படும்.
மனுதாரரின் ஓய்வூதியக் கணக்கு எண் 04546265833 ஆகும். ஓய்வூதியம் மனுதாரரின் UNION BANK OF INDIA வங்கியில் வைத்துள்ள வங்கி சேமிப்புக் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். வங்கி கணக்கில் மாறுதல் ஏதேனும் இருந்தால் மனுதாரர், அது குறித்து உடனடியாக அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
தவறான தகவல்கள் அல்லது ஆவணங்கள் அளித்து ஒய்வூதியம் பெறப்பட்டிருப்பது தெரியவரும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த ஆணை இரத்து செய்யப்படும் என சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஆணை பிறப்பித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் கடந்த 06/11/2023 ஆணை பிறப்பித்தும் இன்று வரை அவருக்கு ஈஸ்வரனுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.


இதனால் உதவித்தொகை உடனடியாக வழங்க கோரி தேனி தாசில்தார் அலுவலகம் முன்பாக ஈஸ்வரன் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.