• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைகை எக்ஸ்பிரஸ் அரைமணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி..!

Byவிஷா

Jul 30, 2022

மதுரையில் இருந்து இன்று காலை வைகை எக்ஸ்பிரஸ் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் வசதிக்காக பகல் நேர சென்னை பயணத்திற்கு ஏதுவான ரயில் போக்குவரத்தில் வைகை எக்ஸ்பிரஸ{க்கு மிக முக்கியப் பங்கு உண்டு. இந்நிலையில், மதுரையில் இருந்து காலை வழக்கமாக புறப்படும் வைகை விரைவு ரயில், இன்று (ஜூலை 30) காலை 7:10 மணிக்கு கிளம்ப வேண்டிய நிலையில் 7.15 வரை நடைமேடைக்கு வராமல் இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.
மேலும், 7:20க்கு நடைமேடைக்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ் சுமார் அரைமணி நேரம் தாமதமாக 7:50க்கு சென்னை புறப்பட்டது. இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில் தொழில்நுட்ப சிக்கலால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.