• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

என்னுடைய எதிர்காலத்தை தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள்! ஓபிஎஸ் பரபரப்பான பேச்சு…

Byகாயத்ரி

Jun 26, 2022

பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்

தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். உண்மையான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் எண்ணற்ற தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்.

அவர்கள் செய்த தவறுக்கு உண்மையான அதிமுகவின் புரட்சித்தலைவி, புரட்சித்தலைவரின் தொண்டர்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள்.அதிமுகவில் என்னை யாராலும் பிரிக்க முடியாது, புரட்சித்தலைவி அம்மா இதயத்தில் இருக்கும் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்றவர் என்னுடைய பாக்கியம் என்று அம்மாவின் வார்த்தைகளில் இருந்து வந்துள்ளது இந்த பாக்கியத்தை விட எனக்கு என்ன வேண்டும்.

என்னுடைய எதிர்காலத்தை அம்மாவின் உண்மையான தொண்டர்கள் வாரிசுகள் என்னை நியமிப்பார்கள், யாரால் இந்த அசாதாரண சூழல், யாரால் சதிவலை பின்னப் பட்டது என்பது விரைவில் வெளியே தெரியவரும்.என்னை யாராலும் நீக்க இயலாது என்னுடைய எதிர்காலம் என்பது அதிமுக தொண்டர்கள் பொது மக்களிடம் தான் உள்ளது என்றார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு பிரச்சார வாகனத்தில் ஏறி தேனி நோக்கி புறப்பட்டுச் சென்றார் மதுரை விமான நிலைய சாலை முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.