அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், சின்னம்மாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ். நடிகர் நம்பியார் நிஜத்தில் நல்லவா் ஆனால் ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது, அதிமுகவின் நிரந்தர எதிரியான திமுகவை எதிர்க்க ஒற்றைத்தலைமையான எடப்பாடி இருந்தால் தான் அதை செய்ய முடியும், திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவினரின் இரத்தத்தில் ஊறியது,
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஒபிஎஸ் பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என யார் மனதை குளிர்விக்கும் வகையில் பேசுகிறார். ரவீந்திரநாத் குமார் திமுக முதல்வரை சந்தித்து பேசுகிறார். இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என பேசி வந்துள்ளார். இது அதிமுகவை சோர்வடைய செய்துள்ளது என குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், சசிகலாவை சேர்க்கக்கூடாது. ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும் என ஒபிஎஸ் விடுத்த கோரிக்கையை ஈபிஎஸ் செய்தார். பிறகு எதற்கு டிடிவி தினகரனோடு எதற்கு ஒபிஎஸ் ரகசிய உறவாடுகிறார். சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், சந்தேக தலைமை வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும், தொண்டர்களை ஓபிஎஸ் கைவிட்டுவிட்டார்.
தொண்டர்கள் என்ற புனிதச்சுமையை சுமப்பதற்கு ஒபிஎஸ் தயாராக இல்லை, தனது குடும்பத்தின் நலன் மீது மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். ஓபிஎஸ் கட்சி நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து இருப்பார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு மூத்த தலைவர்கள் முயன்று இருக்கிறோம், ஆனால் ஓபிஎஸ் அதற்கு ஒத்துழைக்கவில்லை, நம்பியார் திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் உண்மையில் நல்லவர். ஓபிஎஸ் நல்லவராக இருந்தாலும் தொண்டர்களை நலனில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காவல்துறைக்கு சென்று பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறியது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது. தொண்டர்கள் உடைய மனக்குமுறல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைவரையும் அழைக்கின்றனர். நல்ல தலைமை என்றால் தேடி வர வேண்டும் எதற்கு அழைக்க வேண்டும், அப்படி வருபவர்கள் எதற்காக வருவார்கள் என தெரியும். வழிகாட்டுதல்கள் குழுவில் ஓபிஎஸ் தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பதவி வாங்கி கொடுத்தவர். ஆனால் உண்மையாக உழைப்பவர்களுக்கு கொடுக்கவில்லை. ஓபிஎஸ்க்கு மன உறுதி என்பதே இல்லை, அதனால் மன உறுதியோடு இருக்கும் ஈபிஎஸ் தான் தலைமைக்கு சரியான நபர் தொண்டர்களின் கௌரவத்தை மீட்டெடுப்பார். தலைமை என்றால் உறுதியோடு அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும் அது ஈபிஎஸ் தான். ஈபிஎஸ் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதிமுகவை எதிர்த்த எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ் உருவாகுவார். தென்மாவட்டத்தில் ஓபிஎஸ் இடத்தை பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இருவரும் காட்டுகின்ற வழியில் தற்போதும் நான் பயணிக்கிறேன் என்றார்.

- எம்எல்ஏ வீட்டில் தலைகீழாக பறந்த தேசியக் கொடிகாரைக்கால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய துணை செயலாளருமான அசனா வீட்டில், […]
- அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சுமதுரை விமானநிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை […]
- திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி ஆலோசனைக் கூட்டம்..விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் கொழுக்கட்டை மாவு வழங்க வேண்டும் […]
- சாத்தூரில் ஆடித்பெருந்திருவிழா கோலாகலம்…சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள […]
- சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஜினி வெளியிட்ட வைரல் வீடியோ75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ75 வது சுதந்திர தினத்தை […]
- சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி கண்டன அறிக்கைபாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் நாள் சென்னையில் […]
- ஸ்ரீவில்லிபுத்தூர் எருதுகட்டு விழா .. களம் காணும் காளைகள்..ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற எருதுகட்டு விழா. உற்சாகமாக […]
- தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறதுதமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழித்துக்கட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்காவல்துறை பணியில் […]
- பாஜக ஆட்சியை கலாய்த்த ப.சிதம்பரம்..!சிவகங்கையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பாஜக ஆட்சியை […]
- கொலை டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்புபாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் […]
- அழகு குறிப்புகள்முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்:
- சமையல் குறிப்புகள்ஆனியன் சப்ஜி: தேவையான பொருட்கள் : செய்முறை :முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, […]
- சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதா- ஆர்.பி.உதயகுமார் பேட்டிஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதாசட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் […]
- 75 ஆவது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி..சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி 75 ஆவது சுதந்திர தினத்திற்கு தேவேந்திர […]
- உலக நாயகனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.. நடிகர் வருத்தம்..தமிழ் சினிமாவில் 90’ஸ்களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன […]