கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அன்னபூஜை விழா நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தரின் 122_வது சமாதி தினமான இன்று (ஜுலை_04) கன்னியாகுமரி
சுவாமி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள மண்டபத்தில்.
விவேகானந்தா கேந்திரம் மற்றும் தூத்துக்குடி கிராம முன்னேற்றத் திட்டம் அமைப்பும் இணைந்து நடத்திய அன்னபூஜை நிகழ்வில் மேடையில் பல்வேறு மக்கள் தானமாக கொடுத்த அரிசி மணிகள் ஒரு சிறிய மலைபோல் குவித்து வைத்து பூஜை நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தரின் 122_வது சமாதி தினமான இன்று நடைபெற்ற விழாவில்.

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுடன், இன்று மதியம் வழங்கப்பட்ட உணவிற்கு,அரிசி நீங்கலாக அனைத்து வகை காய்கறிகள்,எண்ணை, மசாலா பொருட்களை தளவாய் சுந்தரம் அவரது சொந்த பணத்தில் வழங்கியிருந்தார்.
நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன், தொழில் அதிபர் அழகு சுந்தரம்,ஆனந்த குமார் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்
நிகழ்வை வாழ்த்தி பேசினார்.