விஷன் போர்ட் ஆர்ட்’ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘விஷன் போர்ட் கிட்’ எனும் புதிய கருவியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
‘விஷன் போர்ட் ஆர்ட்’ நிறுவனத்தின் இயக்குனர் லட்சுமி தேஜா முன்னிலையில் ‘மாற்றம் பவுண்டேஷன்’ நிறுவனர் சுஜித் குமார் ‘விஷன் போர்ட் கிட்’ கருவியை அறிமுகப்படுத்த ‘சாய் கிங்ஸ்’ நிறுவனர் பாலாஜி சடகோபன் அதனை பெற்றுக் கொண்டார்.
இது குறித்து ‘விஷன் போர்ட் ஆர்ட்’ நிறுவனத்தினர் கூறுகையில்,
20 ஆயிரம் குழந்தைகளுக்கு விஷன் போர்ட் கிட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 2025 குழந்தைகளை ஒரே இடத்தில் குட்டி விஷன் போர்ட் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி அப்துல் கலாம் ஐயாவின் பிறந்தநாளை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு விழாவை ஏற்பாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.