• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் விசுவ இந்து பரிசத் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

BySeenu

Apr 26, 2025

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலில் 27 அப்பாவி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர், இதனை கண்டித்து. கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் செய்தியாளிடம் கூறும்போது :-

காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பகுதிகளே, தீவிரவாதிகள் இந்துக்கள் மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி உள்ளனர். அங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற, சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் பெயர்கள் மதங்களைக் கேட்டு, அடையாளங்களை தெரிந்து கொண்டு ஹிந்துக்கள் என தெரிந்தே ஆண்களை மட்டும் குறி வைத்து தாக்கி உள்ளார்கள். அதில் 27 பேர் மரணம் அடைந்து உள்ளனர். அதில் இன்னும் பல பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்தவர்களும் அடக்கம். இதை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நாடு முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறது.

குறிப்பாக இந்த நாட்டிலே இதுவரை இல்லாத அளவிலே பெரும்பான்மை சமுதாய மக்கள் வாழக் கூடிய, இந்த நாட்டில். ஆர்ட்க்கல் 378 காஷ்மீரில் அகற்றி விட்டார்கள் என்பதற்காக, இந்த படுகொலை நிகழ்ந்ததாக ராணுவ அமைச்சர் பேசி உள்ளார். பாகிஸ்தான்காரர்கள் கஷ்மீரில் உள்ள உள்ளூர் தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தி உள்ளார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் மற்ற ஹிந்து இயக்கங்களும் இதை வன்மையாக கண்டிக்கிறது எனக் கூறினார்.