• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளர் மூலம் திறக்கச் செய்த விருதுநகர் எம்.பி

ByKalamegam Viswanathan

Feb 21, 2023

சிவகாசி மாநகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளரை அழைத்து திறக்கச் செய்த, விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி .
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின் 43வது வார்டு உறுப்பினர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவிசங்கரின் தீவிர முயற்சியினால், அம்மன்கோவில்பட்டி தெரு பகுதியில் சுமார் 8 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அந்தப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில், எம்.பி. மாணிக்கம் தாகூர் துவக்கி வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு நிகழ்ச்சியில் செய்திகளை படம் பிடித்துக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர் வைத்தியலிங்கம் என்பவரை மாணிக்கம் தாகூர் அழைத்து, அவரது கையால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறக்கச் செய்தார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.