விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி. பாண்டி மூப்பனார் சமுதாய கூடத்தில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் காளிதாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராகமாமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவருமான மணிவண்ணன்.கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் குறிப்பாக மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் பேசும் பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளமாக மருத்துவர் ஐயா திகழ்கிறார் அவர் இல்லாமல் கட்சி இல்லை அவரை உதாசீனப்படுத்தி பேசும் சிவகாசியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகியை கண்டிப்பதாகவும் பேசினார். இந்த மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் இராஜபாளையம் பகுதியில் ஏவிஎம் நிறுவனத்தின் மூலம் தூய்மை செய்யும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது .

கண்டிக்கத்தக்கது நகரத்தை குப்பை நகரமாக மாற்றி வரும் ஏவிஎம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதேபோல் ராஜபாளையம் 1066 கூட்டுறவு ரேஷன் கடைகளில் பல்வேறு முறையில் நடைபெறுகிறது அதை தடுக்க அரசு அதிகாரியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆவாரம்பட்டி பகுதியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அதில் பல விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அதை சரி செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டன













; ?>)
; ?>)
; ?>)