விருதுநகர் மாவட்டம் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சித்தாலம்புத்தூர் கண்ணார்பட்டி பகுதியில் நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் வாரிய தலைவரும், அதிமுக மேற்கு மாவட்ட கழக பூத் கமிட்டி பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியது..,
அம்மா முதலமைச்சராக இருந்தபோது நான் அமைச்சராக பத்தாண்டுகள் இருந்தேன். சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கு பெண்கள் 20 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கையில் குழந்தையுடனும், திருமணமான பெண்களுக்கும் அதிகமாக வேலை வாய்ப்பு வழங்கியுள்ளோம். பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் பாடுபடும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும், மீண்டும் நானும் அமைச்சராக பொறுப்பேற்று இன்னும் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுப்பேன் எனக் கூறினார். புதிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.