• Thu. Apr 24th, 2025

மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு பெண் பலி..,

ByK Kaliraj

Apr 8, 2025

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 40) ,இவரது மனைவி அமுதவல்லி முத்தலாபுரம் பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவர் விருதுநகரில் நடைபெறும் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாக்கு செல்வதற்காக உறவினர்கள் மாரிஸ்வரி, மீனாட்சி, முத்துமாரி, உள்பட 10 பேர் குமாராலிங்கபுரத்தில் இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தவர் கோவில் திருவிழாவிற்கு நடந்து சென்றவர்கள் மீது பின்புறமாக மோதினார்.

அதில் அமுதவல்லி பலத்த காயமடைந்தார், மற்ற ஐந்து பேரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமுதவல்லி ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து பாண்டி ஆமத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்ததன் பேரில் போலீசார் சரவணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்