

விருதுநகர் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆனைக்கிணங்க, விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக (மே) & ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பூத்எண்: 170,171,172,173,174,175, 267,268 உட்பட்ட பகுதிகளுக்கு இன்றைய தினம்
மல்லி உள்ளூர்பட்டி திருமண மண்டபத்தில் சீறும் சிறப்புடன் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்கள்.
அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர், விருதுநகர் மாவட்ட (மே) பூத்கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன்
மேலும் இந்நிகழ்வின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணபாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.


