• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கேடிஆர் க்கு தீபாவளி வாழ்த்துச் சொன்ன விருதுநகர் நகரச் செயலாளர் முகமது நெய்னார்

Byமகா

Oct 23, 2022


இரண்டு ஆண்டுகள் கொரானா தொற்று காரணமாக தீபாவளி பணிடிகைககளில் யாரும் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த முறை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பாக கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை சொல்லி ஆசிபெற்று வருவதுதான் ஹைலைட்டான ஒன்று.
திருத்தங்கலில் உள்ள அதிமுக மாவட்ட கழக செயலாளர்இ முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இல்லத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரடியாக சந்தித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவினர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து வருகின்றனர். இதில் விருதுநகர் அதிமுக நகரச் செயலாளர் முகம்மது நெய்னார் படைசூள கே.டி.ராஜேந்திரபாலாஜி அவரது இல்லத்தில் சந்தித்து தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியாக கூறியோதோடு மட்டுமல்லாமல் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில் விருதுநகர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம்,

மேற்கு ஒன்றிய செயலளார் கண்ணன், விருதுநகர் தகவல் தொழில்நுட்ப அணியின் நகரச் செயலாளர் பாசறை சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அனைவரும் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றனர்.