

விராட்கோலியை செப்டம்பர் மாதமே கேப்டன் பதவியில் விலகுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவரை கடைசி நேரத்தில் நீக்கவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரரும் டெஸ்ட் அணி கேப்டனுமான விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில், ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியை விட்டு தான் விலக விரும்பவில்லை என்றும் கடைசி நேரத்தில்தான் ஒரு நாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக சொன்னார்கள்.
இதுபோல் டி20 கேப்டன் பதவியிலிருந்து நான் விலகுவதாக அறிவித்தபோது, அதனை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று தேர்வுகுழு என்னிடம் கேட்கவில்லை என்றும் இன்னும் பல்வேறு கருத்துக்களை அவர் வெளியிட்டார்.இந்த கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதனையடுத்து தற்போது விராட்கோலிக்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது. “கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி நீக்கப்பட்டது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு.
அவர் ஏற்கனவே டி20 கேப்டன் பதவியை விட்டு விலகிவிட்டதால் அதன் பிறகு வெள்ளை பந்து வடிவ போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் இருப்பது சரிவராது என்பதால் விராட்கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.