2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதனால் நேற்று மாலை முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்தது.

தேர்தல் அதிகாரிகள் கட்சி பாகுபாடின்றி தங்கள் பணிகளை செய்து வரும் நிலையில் விருதுநகர் தந்தி மர தெரு ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா சிலை திறந்த வெளியில் உள்ளது .இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் படி கட்சி தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட வேண்டும் அல்லது துணிகள் போன்ற சில பொருட்களால், வெளியே தெரியாதவாறு மறைக்கப்பட வேண்டும். விருதுநகரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஏன் செயல்படாமல் உள்ளனர் என்பது பொதுமக்களின் வினாவாக உள்ளது.




