• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 18 கிலோ கொலுக்கட்டை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி எளிமையாக கொண்டாடப்பட்டது.

காலை 10 மணி அளவில் கோவில் திருகுளத்தில் சண்டிகேசர் மற்றும் அங்குசதேவருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் 18 கிலோ அரிசியில் செய்யப்பட்ட முக்கூரணி கொழுக்கட்டை விநாயகப்பெருமானுக்கு படைக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசின் வழிமுறைகளின் படி தேர்த்திருவிழா மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசித்து சென்றனர்.